Breaking News

தமிழ்நாட்டிற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டிற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டிலும் அதையொட்டிய ஆந்திரப் பகுதிகளிலும், வருகிற 10ஆம் தேதி முதல் மழைப்பொழிவுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 10, 11ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 12 அன்றும் அதையடுத்த இருநாட்களிலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.