Breaking News

நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது பற்றி மத்திய கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது பற்றி ஆலோசனை

எம்பிபிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது பற்றி மத்திய கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு முறை தேர்வு நடத்துவது பற்றி ரமேஷ் பொக்ரியால் மத்திய கல்வி அமைச்சராக கடந்த ஆண்டு இருந்த போது பரிசீலிக்கப்பட்டாலும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

ஒரூ ஒரு முறை தேர்வு எழுதினால் மட்டுமே மாணவர்கள் நீட்டில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்களை பெறுவது கடினம் என கருதப்படுவதால் அதை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில இருந்து வருகிறது. எனவே இது குறித்து விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.