Breaking News

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தேசிய தேர்வு முகமையின் பணி என்று நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் அகில இந்திய தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது. தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் எந்த இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளனரோ, அதன்படியே தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் போது, அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் என்ன வகையான இட ஒதுக்கீடு பிரிவுகள் நடைமுறையில் உள்ளதோ அதன்படியே விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வை மத்திய அரசும், மாநில அரசுகளுமே நடத்துகின்றன, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் விண்ணப்பித்தால், மத்திய அரசில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு பிரிவுகளின் படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளது.