பள்ளிகள் திறக்க உள்ளதையொட்டி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
பள்ளிகள் திறக்க உள்ளதையொட்டி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை
அதிகாரிகள் ஆலோசனை
பள்ளிகள் திறக்க உள்ளதையொட்டி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை
அதிகாரிகள் ஆலோசனை
நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னையில் ஆசிரியர்
சங்கப் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பள்ளிகளைத் திறக்கும் போது ஆசிரியர்கள் எப்படிச் செயல்பட
வேண்டும் என்பதைக் கல்வித்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பள்ளிகளில் கொரோனா
தடுப்பு விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆசிரியர் சங்கப்
பிரதிநிதிகளின் கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.