காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - முழு விவரம்
நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்காது - அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி
நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்காது
நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி ஒன்று முதல் 8ஆம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி நேரடி வகுப்புகள் துவங்கும்
என்றார்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்காது எனவும்,
அதற்கு பதிலாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
டிசம்பர் மாதத்தில் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.