புதுச்சேரியில் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு காரணமாகப் கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், அந்த வகையில், 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும், பெற்றோர்கள் விருப்பத்திற்கேற்ப மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் அமைச்சர் நவச்சிவாயம் தெரிவித்துள்ளார்.