புதிய கல்வியாண்டு தொடங்கியதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க திட்டம்
புதிய கல்வியாண்டு தொடங்கியதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும்
பள்ளிகளை திறக்க திட்டம்
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வர
தொடங்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.
புதிய கல்வியாண்டு தொடங்கியதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும்
பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும்
தினந்தோறும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், பள்ளி வளாகங்களை
பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்