Breaking News

மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?
* வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் -2021 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு -2021

* வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் , விபா நிறுவனம் , என்.சி.இ.ஆர் , டி { NCERT , GOVT.OF INDIA ) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை , மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணாவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 30-11-2021 ( செவ்வாய் மற்றும் 05-12-2021 ( ஞாயிறு ) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன் , டேப்லெட் , மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது . இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் , இந்தி , மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும் முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.