Breaking News

எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு

எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு
கொரோனா சூழல் கருதி ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

பாடங்கள் குறைப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காக்கர்ல உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடப்பு கல்வியாண்டில் 1,2-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவிகித பாடங்கள் குறைக்கப்படுகிறது. 3 மற்றும் 4-ஆம் வகுப்புகளுக்கு 49 சதவிகித பாடங்களும், 5-ஆம் வகுப்புக்கு 48 சதவிகிதமும், 6-ஆம் வகுப்புக்கு 47 சதவிகிதமும் பாடங்கள் குறைக்கப்படுகின்றன. 7, 8-ஆம் வகுப்புகளுக்கு 46 சதவிகிதமும், 9-ஆம் வகுப்புக்கு 38 சதவிகிதமும் பாடங்களும், 10-ஆம் வகுப்புக்கு 39 சதவிகித பாடங்கள் குறைக்கப்படுகிறது.

அதேபோல, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35 முதல் 40 சதவிகித பாடங்கள் குறைக்கப்படும். மேலும், பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறதோ அந்த நேரத்தில் மாணவர்களுக்கு 50 நாட்களுக்கு ஏற்கனவே ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் நடத்திய பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டும். குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கேற்ப முழு பாடத்தையும் படித்து தயாராக வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.