Breaking News

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு - தமிழக அரசு முடிவு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு - தமிழக அரசு முடிவு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான கமிட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தது. அரசு பொறியியல் கல்லூரியில் சேரக்கூடிய அரசுப்பள்ளி மாணவர்கள் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதை பூர்த்தி செய்யவே மருத்துவ படிப்பை போன்று தொழில் படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை முழுவதுமே அரசுப்பள்ளியில் படித்திருக்க வேண்டும். இடையில் சேர்ந்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.