6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி
நாடு முழுவதும் கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்த மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதிலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்ததை தொடர்ந்து நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையான மாணவர்கள் பள்ளிக்கு வர அரசு அனுமதித்தது. இதையடுத்து, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.