ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு
ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர்
பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS ,
Hi - Tech Lab Usage மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின்
பொறுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக , முதற் கட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 12.08.2021 முதல்
18.08.2021 வரை 05 நாட்கள் பயிற்சி முடிக்கப்பட்டு , இரண்டாம் கட்ட பயிற்சி
ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை 05 நாட்கள் நடைபெற்று வருகிறது.
மேற்காண் பயிற்சி அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.
எனவே , மூன்றாம் கட்ட பயிற்சியானது 31.08.2021 முதல் 05 நாட்கள் பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்கப்பட உள்ளது .
* வட்டார வள மைய ( பொ ) மேற்பார்வையாளர் தங்கள் ஒன்றியங்களில் உள்ள அனைத்து
பள்ளிகளின் பயிற்சி பெற உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து கீழ்கண்ட
Excel படிவத்தில் 26.08.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் மாவட்டத் திட்ட
அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . ( எக்காரணம் கொண்டும்
குறு வளமையம் மூலம் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது )