10 11ஆம் வகுப்புத் துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
10, 11ஆம் வகுப்புத் துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்புத் துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத்
தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தேர்வுகளில் தோல்வியடைந்தோர் மற்றும் தனித்தேர்வர்களுக்காகத் துணைத் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16இல் தொடங்கி 28 வரை
நடைபெறும்.
11ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 15இல் தொடங்கி 30 வரை நடைபெறும். இந்தத்
துணைத் தேர்வுகளுக்கு ஆகஸ்டு 7 முதல் 11 வரை சேவை மையங்கள் வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.