செப்டம்பர் 1இல் பள்ளிகள் திறப்பு குறித்து 20ஆம் தேதி முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்
செப்டம்பர் 1இல் பள்ளிகள் திறப்பு குறித்து 20ஆம் தேதி முடிவு - அமைச்சர் அன்பில்
மகேஷ்
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகிற 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பொதுமுடக்க நீட்டிப்பு அறிவிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து உத்தேசித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக முதலில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வருகிற 20ஆம் தேதி இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பேசியபிறகு அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.