அனைத்து பல்கலைக்கழகங்களிலும் M PHIL படிப்பு தொடரும் -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பு தொடரும் -உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடி
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பு தொடரும்
சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்
படிப்பை தொடர்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அமைச்சர்
பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 13
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை
சந்தித்த அவர், ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
துவங்கும் என்றார்.
மாணவர் சேர்க்கையை அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரி நடத்த
அறிவுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.