தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு - பாண்ட் - வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு - பாண்ட் -
வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்கலாம்
என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 2 வருடங்கள்
அதிகரித்தார். அதாவது 60ஆக உயர்த்தினார்.
இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய பல செட்டில்மென்ட்கள்
தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம்.
இளைஞர்களுக்கு வேலை தேவை
தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான், அரசு ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது.
அதற்கான அரசாணையையும் பிறப்பித்திருந்தனர். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் அரசு
துறைகளில் உருவாகவில்லை. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும்
தடை விழுந்தது.
ஸ்டாலின் விருப்பம்
இந்த நிலையில், தற்போது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
திட்டத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின், 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 மாதத்தில் ஓய்வு தரலாமா
குறிப்பாக, 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள்
9 மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள். அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய
அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்துள்ளது.
அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும் ;
அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை; ஆனால், தற்போதையை நிதி
நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல்
தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாண்ட் கொடுக்கலாமா
இதனை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது, ஊழியர்கள்
ஓய்வு பெறும் நாளில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு பணமாக மாற்றிக்கொள்ளும்
வகையில் பாண்ட் (பத்திரங்கள்) கொடுத்து விட்டால் சமாளிக்கலாமே என்பதாக விவாதம்
நடந்துள்ளது.
தீவிர ஆலோசனை
அதேநேரம், பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஏற்கமாட்டார்கள்; 58 ஆக குறைப்பது
சர்ச்சையையே ஏற்படுத்தும் , யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இருப்பினும், எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன
வழிகள் இருக்கு ? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம் ? என்கிற
ஆலோசனை முற்றுபெறவில்லை. இதனை அறிந்து அரசு ஊழியர்கள்
அப்-செட்டாகியிருக்கிறார்கள்.