Breaking News

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை முதல் 4 நாட்களுக்கும் தென் மாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.