தலைமையாசிரியர்களுக்கான முக்கிய அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையர்
தலைமையாசிரியர்களுக்கான முக்கிய அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையர்
Instructions Link Click here
1 , 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பட்டியல் ( NR )
சரிபார்க்கப்பட வேண்டும் ,
2. தொலைக்காட்சி வழியாக நடைபெறும் பாடங்களின் ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து
மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் .
3. 2021-22ம் கல்வியாண்டிற்குரிய தேவைப்பட்டியலின்படி புத்தகங்களை பெற்று
பள்ளியில் தயாராக வைத்திருக்க வேண்டும் . உரிய ஆணை வந்தபின்பு மாணவர்களுக்கு
புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டும்.
4. புத்தகம் பெறப்படாத / தேவைப்படும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடன் முதன்மைக்
கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
5. புத்தகங்கள் கூடுதலாக தேவைப்படின் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம்
தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
6. 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி
அளிக்கப்பட்டு உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு இதன் முழு விவரத்தை உடன்
EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
7. பள்ளிக்குத் தேவைப்படும் சுற்றுச்சுவர்களின் அளவை மீட்டர் அளவிலும் ஏற்கனவே
உள்ளவற்றின் அளவையும் உடன் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
8. கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள் , மின்வசதிகள் , பழுது விவரங்கள் ,
இடிக்கப்பட வேண்டிய கட்டிட விவரங்கள் , தேவைப்படும் கழிப்பிட விவரங்கள்
அனைத்தையும் உடன் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
9. கொரோனாவினால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளின் முழு விவரத்தினை சார்ந்த
மாவட்டக் கல்வி அலுவலரிடம் உடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
10. 2013-14 முதல் சேர்க்கப்பட்ட RTE மாணவர்கள் விவரத்தினை EMIS- ல் பதிவேற்றம்
செய்யப்பட வேண்டும்.
11 , 1 முதல் 12 ம் வகுப்பு வரை சேர்க்கை விவரத்தினை Google sheet- ல் பதிவேற்றம்
செய்யப்பட வேண்டும்.
12.1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் விபரம்
பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டும்.
13. ஆங்கில வழி உள்ள பள்ளிகள் அதன் விபரத்தினை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம்
தெரியப்படுத்த வேண்டும்.
14. மேல்நிலை வகுப்புகளில் புதிய பாடப்பிரிவு மற்றும் ஆங்கில வழி துவங்க
விரும்பும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுமதிகோரும் கருத்துருவை
சமர்ப்பிக்க வேண்டும்.
15. 5 , 8 , 10 ஆகிய வகுப்புகள் முடித்த அனைத்து மாணவர்களையும் அருகாமையிலுள்ள
அரசுப் பள்ளிகளில் ஒருவரும் விடுபடாமல் சேர்க்கை செய்வதற்குரிய நடவடிக்கைகள்
தலைமையாசிரியரால் எடுக்கப்பட வேண்டும் .
16. அங்கீகாரம் புதுப்பிக்காத உதவிபெறும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம்
புதுப்பிக்க உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் . தவறும்பட்சத்தில் துறைசார்ந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
1. முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் மனுக்களுக்கான
பதிவேட்டை பராமரிக்கப்பட்டும் உடனுக்குடன் அவற்றுக்கான பதில்களை பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
2. தகவல் அறியும் சட்ட மனுக்களை பதிவேடுகளில் பதிவு செய்தும் உரிய பதிலை
உடனுக்குடன் அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. அங்கீகாரமில்லாத பள்ளிகளின் விவரங்களை உடன் முதன்மைக் கல்வி அலுவலரின்
கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டுவர வேண்டும்.
4. கொரோனாவில் இறந்த பெற்றோர்களை சார்ந்த குழந்தைகளின் விவரங்களை
பள்ளிகளிலிருந்து பெற்று தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடன்
சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புத்தகங்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி
செய்து சான்றளிக்க வேண்டும்.
6. பள்ளிகளில் EMIS பதிவேற்றம் முழுமையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.
7. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர்களை ஊக்கப்படுத்த
வேண்டும்.
8. மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை 18 ன்படி , புதிதாக வழங்கப்பட்டுள்ள முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட விவரங்களை அளவைப் பதிவேட்டில் பதிவு
செய்யப்பட்டுள்ள விவரத்தினை பார்வையிட்டு உறுதிசெய்யப்பட வேண்டும்.