பள்ளிகள் திறப்பது குறித்த விவரம் - எய்ம்ஸ் தலைவர் விளக்கம்
பள்ளிகள் திறப்பது குறித்த விவரம் - எய்ம்ஸ் தலைவர் விளக்கம்
2 முதல் 18 வயதினருக்கான கோவேக்சின் தடுப்பூசி சோதனையின் இரண்டு மற்றும் 3 ஆம்
கட்ட சோதனை முடிவுகள், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுவதால், அதைத் தொடர்ந்து, பள்ளிகளும் திறக்கப்படலாம் என எய்ம்ஸ்
தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி கிடைத்தவுடன், இந்த தடுப்பூசியை 2 முதல்
18 வயதினருக்கு போடலாம் என அவர் கூறியுள்ளார். அதற்கு முன்னரே ஃபைசரின் தடுப்பூசி
நமக்கு கிடைத்தால், அதுவும் குழந்தைகளுக்கு போட ஏதுவாக இருக்கும் என அவர்
கூறியுள்ளார். கொரோனா பாதித்தால் குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகளோ அல்லது
அறிகுறிகள் இல்லாமலோ இருக்கும். ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவும்
வாய்ப்பு அதிகம் எனவும் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.