Breaking News

தமிழக பள்ளி கல்லூரிகள் - அரசு புதிய அறிவிப்பு

தமிழக பள்ளி கல்லூரிகள் - அரசு புதிய அறிவிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் மட்டும் அனுமதி. மூன்று வகையான மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்,பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அறிவித்துள்ளது. மேலும் கல்லூரி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.