Breaking News

ஜுலை 31ஆம் தேதி வெளியாகவுள்ள சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்

ஜுலை 31ஆம் தேதி வெளியாகவுள்ள சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள்கையை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிட செய்வதாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள்கையை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிட செய்வதாக அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எழுதிய இடைத்தேர்தலில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 40% வெயிட்டேஜ் மார்க் வழங்கப்படும். செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

எழுத்துத்தேர்வு மதிப்பீட்டில் மாணவர்கள் குறைந்த பட்சம் 32 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்று கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழுவை அமைத்து பிளஸ் டூ மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கடந்த கால செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.