தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 210 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்பு - 210 பேர்
உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,118 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 210 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
22,720 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 1,00,523 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,227 பேருக்கும், ஈரோடு
மாவட்டத்தில் 1,041 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது. சென்னையில் இந்த
பாதிப்பு எண்ணிக்கை 559 ஆக உள்ளது. பாதிக்கப்பட்ட 9118 பேரில் மூன்று பேர்
ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.