பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க முடிவு - பள்ளிக் கல்வித்துறை
பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க முடிவு - பள்ளிக் கல்வித்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப் பது தொடர்பாக தலைமை செய லர் ராஜீவ் ரஞ்சன் தலைமை
யில் அதிகாரிகள் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் 21-ம் தேதி வரை
நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால்
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.
மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதனால்
பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமை
செயலகத்தில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலர்
ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் மற்றும் துறைசார்ந்த
அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை கரோனா தீவிரமாக இருக்கும். எனவே,
பிளஸ் 2 தேர்வை நடத்துவது சரியாக இருக்காது என சுகாதாரத் துறையும் நோய்த்தொற்று
அச்சத் துக்கு இடையே தேர்வை பாது காப்பான முறையில் நடத்து வதில் நடைமுறை
சிக்கல்கள் இருப்பதாக கல்வித் துறையும் சுட்டிகாட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் விரை வில்
இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.