Breaking News

இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 
ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறு திக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்க ளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகி றது . 

புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப் பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத வீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசி ரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . 

புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . 

மத்திய அரசு ரூ . 500 கோடி வழங்கி உள்ளது . அந்த நிதியில் அரசு மகளிர் பள்ளிகளில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டப்படும் . பண்ணாரி அம்மன் கோயி லில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது . இந் தப் பணிகள் விரைவில் துவங்கும் என்றார்