அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் அட்டைகள் SMART CARD தயார் வழங்குவதற்கான அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் அட்டைகள் SMART CARD தயார் வழங்குவதற்கான
அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்
கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத
பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் ( Smart
Card ) அச்சிடப்பட்டு lanyard மற்றும் Card holder உடன் சார்ந்த மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலக முகவரிக்கு 30.11.2020 முதல் அனுப்பப்பட்டு வருகிறது . திறன்
அட்டைகள் வழங்குவது சார்பாக கீழ்க்கண்ட அறிவுரையினை பின்பற்றிடுமாறு சார்ந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திறன் அட்டைகள் பெறப்பட்டவுடன் , அதில் உள்ள
எண்ணிக்கையினை உறுதி செய்த பின்னர் , 24 மணி நேரத்திற்குள் தங்கள் நிருவாக
வரம்பிற்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்கப்பட வேண்டும் .
2. அதனைத் தொடர்ந்து திறன் அட்டைகள் மற்றும் அதற்கான உபபொருட்கள் ( lanyard and
Card holder ) பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் கடிதம் மற்றும் பெறப்பட்ட எண்ணிக்கை
முதலான விவரங்களையும் இணைப்பில் உள்ள படிவத்தின்படி சார்ந்த மாவட்டக் கல்வி
அலுவலர்கள் , தத்தமது முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரில் வழங்கிட வேண்டும் .
3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் தம் நிருவாக வரம்பிற்குட்பட்ட அனைத்துவகையான அரசு
மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களை நேரில் வரவழைத்து
சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (
Smart Card ) lanyard மற்றும் Card holder உடன் ஒப்படைத்து அதற்கான ஒப்புதல்
கடிதங்களை தொகுத்து , அறிக்கையாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க
வேண்டும் .
4. முதன்மைக் கல்வி அலுவலர்கள் தம் நிருவாக வரம்பிற்குட்பட்ட அனைத்து மாவட்டக்
கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை தொகுத்து , வருவாய்
மாவட்ட அளவிலான அறிக்கையினை , ( Both in Hard Copy and Soft Copy ) இணை இயக்குநர்
( தொழிற்கல்வி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு விரைவஞ்சல் அல்லது தூதஞ்சல் ( By
Speed Post / Courier ) மூலம் அனுப்பப்பட வேண்டும் .
5. வருவாய் மாவட்ட அளவிலான தொகுப்பறிக்கையினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்பப்பட
வேண்டும்.
6. மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உடனுக்குடன் பணிகளை முடிக்கப்பட
வேண்டுமெனவும் , இதில் சுனக்கம் ஏதும் கூடாது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.