களைப்பா இருந்தாலும் பரவால்ல இந்த தவற பண்ணாதீங்க பக்கவிளைவு அதிக
களைப்பா இருந்தாலும் பரவால்ல இந்த தவற பண்ணாதீங்க பக்கவிளைவு அதிக
உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவது நீர். அது தான் நமக்குத் தேவையான
நீர்ச்சத்துக்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கின்றது. 60 சதவீதத்துக்கும்
மேல் நீர் நமது உடலில் நிரம்பியுள்ளது. எனவே தினமும் நாம் போதுமான அளவு தண்ணீர்
குடிக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் நாம் குடிக்கும் தண்ணீர் எத்தகையது
என்பதில் அதிக கவனம் தேவை.
ஏனெனில் சிலர் குளிர்ந்த நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களுக்கு
அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீரின் வெப்ப நிலை
மாறும் போது அதன் தன்மையும் மாறிவிடுகின்றது. எனவே குளிர்ந்த நீரை குடிக்காமல்
இருப்பது நல்லது.
குளிர்ந்த நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
குளிர்ந்த தண்ணீரை குடித்தால் கலோரிகள் எரிந்து உடல் எடை குறையும் என்பது தவறான
எண்ணம். நமது உடலில் இருக்கும் வெப்பநிலை குளிர்ந்த நீரால் குறைந்துவிட்டால்
கொழுப்புகள் உறைந்து கரைவதற்கு நேரம் ஆகும். இதனால் உடல் எடை கூடுமே தவிர
குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
நாம் தண்ணீர் குடிப்பதற்கு காரணமே உடலின் நீரேற்றத்தை அதிகரிக்க தான். ஆனால்
குளிர்ந்த நீர் குடிக்கும் போது அது முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. காரணம் நாம்
உடலுக்குள் செலுத்தும் தண்ணீரை பயன்படுத்த முதலில் சரியான வெப்பநிலைக்கு அதனை
கொண்டு வரவேண்டும் குளிர்ந்த நீர் அந்த செயல்முறையை தடுப்பதால் நீரேற்றம்
பாதிக்கப்பட்டு நமது ஆற்றலை இழக்கக் கூடும்.
குளிர்ந்த நீரை குடிக்கும்போது நாம் புத்துணர்ச்சியுடன் உணர்ந்தாலும் அது சிறிது
நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும். வெகுதூரம் ஓடுபவர்கள் குளிர்ந்த நீர்
குடிக்கலாம். ஆனால் அது சில நொடிகளிலேயே உங்களை சோர்வடையச் செய்யும்.
குளிர்ந்த நீரை நாம் குடிப்பதனால் குமட்டல், அடிவயிறு வலி போன்ற பிரச்சனைகள்
ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் எதிர் அழற்சி பண்புகளை உடையது குளிர்ந்த
நீர். இது ரத்த நாளங்களை சரியாக வேலை செய்ய விடாது. அதோடு அடிவயிற்றை குளிர்ந்த
நீர் இறுக்குவதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
குளிர்ந்த நீர் குடிப்பதனால் உங்கள் கழுத்திற்கு பின்புறம் உள்ள வாக்கஸ் என்ற
நரம்பு வெப்பநிலை காரணமாக பாதிக்கப்படுகிறது இதனால் இதயத்துடிப்பு குறைவதற்கான
வாய்ப்பு உள்ளது.