Breaking News

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்
வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும், ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் புதிய வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐ-மொபைல் (iMobile) செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில், டெபிட் கார்டு இல்லாமல் ரூ. 20 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம். நாடு முழுவதும் வங்கியின் 15 ஆயிரம் ஏடிஎம்களில் இந்த வசதி செய்யப்பட்டுளள்து.

ஏடிஎம் செல்லும் போது, டெபிட் கார்டு எடுத்து வர மறந்து விட்டாலோ அல்லது ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்த விரும்பவில்லை என்றாலோ புதிய வசதி மூலம் பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.

இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறவேண்டும் என்றால், தங்கள் செல்போனில் ஐசிஐசிஐ வங்கியின் செயலியான 'iMobile'-ஐ பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். அப்போது தான் இந்த புதிய வசதியை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.