எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் அமைச்சர் செங்கோட்டையன்
எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் அமைச்சர் செங்கோட்டையன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு
நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் தலைமை
தாங்கினர்
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இணையதள கல்வி மூலம்
அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதியை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது தகுந்த ஆதாரங்களோடு எழுத்துபூர்வமாக மனு
அளித்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறப்பதற்கு உண்டான நடைமுறைகள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்.
ஒரு வாரத்திற்கு முன்பாகவே பள்ளிகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டுள்ளது பள்ளிகள்
திறப்பது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் கூறும் கருத்தின்
அடிப்படையில்தான் உள்ளது.
மேலும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இந்த ஆண்டுக்கான
தொகை இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநில அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது மேலும்
அதற்கு உண்டான நிதியை ஆதிதிராவிட நலத்துறை சார்பாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு
ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளது" என்றார்