திறந்தநிலை பல்கலை தேர்வு அறிவிப்பு
திறந்தநிலை பல்கலை தேர்வு அறிவிப்பு
தமிழக திறந்தநிலை பல்கலையின், செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து
மாணவர்களும், மீண்டும் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலையின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக
திறந்தநிலை பல்கலை சார்பில், டிசம்பரில் நடத்தக்கூடிய தேர்வுகளுக்கான கால
அட்டவணை, www.tnou.ac.in என்ற,
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிச., 17 முதல், 31 வரை எழுத்து தேர்வும்;
வரும், 12ம் தேதி முதல், 16 வரை செய்முறை தேர்வும், ஆன்லைனில் நடத்தப்படும்.
மாணவர்கள் தேர்வை எழுதிய பின், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, பல்கலையின்
இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். தபால் வழியில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள
பல்கலைக்கும் அனுப்பலாம்.இந்த தேர்வில், 2003 முதல் மாணவர் சேர்க்கை பெற்றவர்கள்,
தங்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுதலாம். மேலும், இந்த ஆண்டு அக்டோபரில்
வெளியான தேர்வு முடிவுகளில், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் தேர்வில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.