தமிழகத்தில் மீண்டும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு வடக்கே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி
ஏற்பட்டுள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16-ம்
தேதி அதாவது நாளை, 17-ம் தேதி, நாளை மறுநாள், மற்றும் 18 -ம் தேதி ஆகிய 3
நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு
சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் இதர
மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்,
ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நிரவர் புயல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கனமழை தகவல் அறிந்து
சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பொது மக்கள் யாரும் கன மழை குறித்து
அச்சப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை என, பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக
அரசின் அனைத்து துறைகளும் தாயர் நிலையில் உளளது என அரசு அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில்
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.