கூகிள் மீட் மூலம் நடக்கும் மீட்டிங்கைப் பதிவு செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க
கூகிள் மீட் மூலம் நடக்கும் மீட்டிங்கைப் பதிவு செய்வது எப்படினு பார்க்கலாம்
வாங்க
சமீப காலமாக, தொழில்முறை மற்றும் கல்வி பயன்பாடுகளுக்காக வீடியோ கான்பரன்சிங்
சேவைகள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் PC க்களுக்கு
இதுபோன்ற பல வீடியோ கான்பரன்சிங் சேவைகள் இப்போது உள்ளன, பல பயனர்கள் இந்த
கருவியை விரும்புவதால் கூகிள் மீட் ஒரு வீட்டு பயன்பாட்டு கருவியாகிவிட்டது.
ஏதேனும் பயிற்சிக்கான ஒரு மீட்டிங்கில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்று கற்பனை
செய்து கொள்ளுங்கள், நீங்கள் குறிப்புகளை எடுக்க வேண்டும் அல்லது பயிற்சியின்
விவரங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் அங்கு சொல்லிக்கொடுக்கும் வேகத்தில்
உங்களால் ஏதும் செய்ய முடியாது. அவ்வாறான நிலையில், உங்கள் எதிர்கால தேவைக்காக
Google Meet மூலம் நடக்கும் மீட்டிங்கை நீங்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும், எல்லா பயனர்களும் கூகிள் மீட் அழைப்பைப் பதிவு செய்ய முடியாது, ஒரே
அமைப்பு அல்லது வகுப்பறையில் இருப்பவர்கள் மட்டுமே அதைப் பதிவு செய்ய முடியும்.
கூகிள் மீட் அமர்வை எவ்வாறு பதிவு செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்:
கூகிள் மீட் அமர்வைப் பதிவு செய்ய, நீங்கள் Google Meet மூலம் ஒரு மீட்டிங்கைத்
துவங்க வேண்டும் அல்லது சேர வேண்டும்.இப்போது, கீழ் வலது மூலையில் உள்ள மூன்று
புள்ளிகளைக் கிளிக் செய்க.
பாப்-அப் மெனுவின் மேலே தோன்றும் “Record meeting” விருப்பத்தைத் தேர்வுசெய்ய
வேண்டும். இந்த விருப்பம் தெரியவில்லை என்றால், மீட்டிங்கைப் பதிவு செய்யும்
திறன் உங்களிடம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“Ask for consent” என்று கூறும் பாப்-அப்பில் “Accept” என்பதைக் கிளிக்
செய்க.அவ்வாறு செய்தால், பதிவு செய்யும் முறை ஆரம்பமாகும்.மூன்று புள்ளிகளைக்
கிளிக் செய்து, பாப்-அப் இல் “Stop recording” விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன்
மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவை நிறுத்தலாம்.
மீட்டிங் அமைப்பாளரின் கூகிள் டிரைவிலிருந்து “Meet Recordings” என்ற
கோப்புறையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கூகிள் மீட் கோப்பைப் பெறுவீர்கள்.
நீங்கள் பதிவுசெய்யும் வீடியோவில் செயலில் உள்ள பேச்சாளர் மற்றும் அவர் வழங்கிய
பிற உள்ளடக்கம் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் திறக்கும்
அறிவிப்புகள் மற்றும் பிற சாளரங்கள் இதில் பதிவு ஆகாது. மேலும், பதிவின் போது
நேரடி கேப்ஷன்கள் பதிவு செய்யப்படாது மற்றும் நீங்கள் பதிவை இயக்கும்போதும்
தோன்றாது.