Breaking News

அடுத்தப்படியாக கூகுள் மேப்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் புதியதொரு வசதி

அடுத்தப்படியாக கூகுள் மேப்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் புதியதொரு வசதி
இப்போது உலகளவில் கூகுள் மேப்ஸ் வசதியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் முக்கியமாக இதில் பல்வேறு புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன என்று தான் சொல்லவேண்டும். அதன்படி அடிக்கடி பார்வையிடும் இடங்களுக்கு பயனர்கள் சுலபமாக செல்ல உதவும் எண்ணத்தின் பிரகாரம் கூகுள் மேப்ஸ் புதிய Go என்ற Tab-ஐ அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது . இந்த புதிய டேப் ஆனது தற்போது Explore மற்றும் Saved tabs-களுக்கு இடையில் இடம்பெற்றிருக்கும் மற்றும் Commute டேப்பை Replace பண்னுகிறது என்பது சிறப்பான தகவலாகும் . மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூகுள் மேப்ஸ்-ன் Go tab ஆனது உங்களுக்கு பிடித்தமான இடங்களை Pin செய்து வைத்து கொள்ளவும். அதன் மூலமாக அவைகளை குறித்த தகவல்களை சீக்கிரமாக பெறவும் வழிவகுக்கும்.