Breaking News

இந்தவகை வாழைப்பழங்களில் இருக்கும் பேராபத்து

இந்தவகை வாழைப்பழங்களில் இருக்கும் பேராபத்து
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உலக மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் விலையுடன் ஒப்பிடும்போது ஏராளமான சத்துக்கள் அடங்கிய, எல்லோராலும் வாங்கி சாப்பிடக்கூடிய எல்லா காலங்களிலும்,எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். சாதாரணமாக நம்முடைய நாட்டு வாழைப்பழம் அதிக விலைக்கு விற்கப்படும்போது இந்த மோரிஸ் வாழைப்பழம் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது.

இது அளவில் பெரிதாக பார்க்க பளிச்சென்று இருக்கும். இதன் விலை ஏன்? இவ்வளவு குறைவாக உள்ளது என நாம் யாரும் யோசித்தது இல்லை.

நம்மை பொறுத்தவரையில் விலை மலிவாக இருக்க வேண்டும், பார்க்க நன்றாக இருக்கவேண்டும். இது நமக்கு நன்மையா ? தீமையா ? என்று கூட யோசிப்பதில்லை.நம் நாட்டு பழங்களை பழுத்த நிலையில் 2-நாட்கள் வரையே வைத்திருக்க முடியும்.

ஆனால் இந்த வகை பழங்கள் பல நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதில்லை .இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க பலவித பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கின்றன.

உண்மையில் இந்த பழத்தினால் எந்த ஒரு மருத்துவ நன்மையும் கிடைக்காது. மாறாக இதனால் தீமைகளே அதிகம் என கூறப்படுகிறது. அதே போல் மரபணு மாற்றப்பட்ட இந்த பெரிய அளவிலான மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கியமாக இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கில் இருந்து செடி வளரும், அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் இதில் அப்படி இல்லை.

ஒரு வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். இந்த பழத்தை நாமும் சாப்பிடும்போது மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இதில் நடக்கும் மற்றொரு தவறு செயற்கை முறையில் பழுக்க வைப்பது. மாம்பழம் எப்படி கால்சியம் கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறதோ அதே போன்று வாழைப்பழங்கள் போபலின் என்ற இரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது.

இந்த இராசயனம் தெளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காய்கள் பழுக்க தொடங்கிவிடும். இவ்வாறு பழுக்கப்பட்ட வாழைப்பழங்களை யாரும் தாருடன் பார்க்க முடியாது.ஏனென்றால் இவை எப்பொழுதும் சீப்புகளாகவே விற்கப்படும்.

இயற்கையாக விளைந்த நாட்டு பழங்களின் தாருக்கும்,இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்பட்ட தாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் வாழைத்தார் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார் பச்சை நிறத்தில் இருக்கும். அதேபோன்று இவ்வாறு பழுக்க வைக்கப்படும் வாழை பழங்கள் 7 நாட்கள் வரை கெடாது. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.

இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த இராசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும்.