அளவுக்கு மீறினால் அலைபேசியும் ஆபத்தாகும்
அளவுக்கு மீறினால் அலைபேசியும் ஆபத்தாகும்
மனித உறவில் பாதிப்பு ஏற்பட்டதாக விவோ, சைபர் மீடியா ரிசர்ச் நிறுவன ஆய்வில்
தெரிய வந்துள்ளது.'மனித உறவில் அலைபேசியின் தாக்கம்' என்ற தலைப்பிலான இந்தN
ஆய்வின் முக்கிய அம்சங்கள். அதிக பயன்பாடு காரணமாக அலைபேசிக்கு மக்கள்
அடிமைஆகின்றனர். இது, மனித உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஊரடங்கு காலத்தில்
அலைபேசியுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டுள்ளனர்.
2019ல் இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளின் பகல் பொழுதில் 4.5 மணிநேரம் அலைபேசியில்
செலவிட்டனர். இந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் 39 சதவீதம் உயர்ந்து, 7 மணி நேரமாக
அதிகரித்தது.
வீட்டிலிருந்து அலுவலக பணிக்காக அலைபேசியை பயன்படுத்தும் நேரம் 75 சதவீதம்
அதிகரித்தது. பேச 63 சதவீதம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற
பொழுதுபோக்கு'ஓடிடி' தளங்களில்59 சதவீதம், வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற
சமுக வலைதளங்களில் 55 சதவீதம், வீடியோ கேமிற்காக 45 சதவீத நேரம் கூடுதலாக
அலைபேசியை பயன்படுத்தியுள்ளனர்.
செல்பி, புகைப்படம் எடுக்க செலவிடும் நேரம் ஒரு நாளில் 14ல் இருந்து 18 நிமிடமாக
அதிகரித்துள்ளது. காலையில் எழுந்த 15 நிமிடத்தில் அலைபேசியை 84 சதவீதம் பேர்
பார்க்கின்றனர்.
காரணமே இல்லாமல் அலைபேசியை 88 சதவீதம் பேர் அடிக்கடி 'ஸ்வைப்' செய்கின்றனர்.
அதிகமாக அலைபேசி பயன்படுத்துவது குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை பாதிப்பதாக 89
சதவீதம் பேர் கூறினர். இந்தியர்கள் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு
பகுதியை அலைபேசியில் செலவிடுகின்றனர். ஆண்டுக்கு 1800 மணி நேரம் செலவிடுகின்றனர்.
அலைபேசியை பார்க்காமல் குடும்பம், நண்பர்களுடன் 5 நிமிடம் கூட பேச இயலாது என
மூவரில் ஒருவர் தெரிவித்தனர்.
அலைபேசி பயன்படுத்தாமல் இருந்தால் கோபம், எரிச்சல் வருவதாக 74 சதவீதம் பேரும்,
தனிமையில்தவிப்பதாக73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
70 இதேவேகத்தில் அலைபேசியை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல், மனதளவில் பாதிப்பு
ஏற்படும் என்பதை 70 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டனர். அத்தியாவசிய தேவைக்குமட்டும்
அலைபேசி, 'டிவி' கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து
என்பதை உணர வேண்டும்.
இருதயத்திற்கும் இன்னல் நேரும்
இருந்த இடத்தில் இருந்து தொலைக்காட்சி, அலைபேசியை அதிகம் பார்ப்பதனால் உடலுக்கு
பயிற்சி கிடைக்காமல் நாம் செலவிடும் கலோரி அளவு குறையும். இதனால் உடல் எடை
கணிசமாக அதிகரித்துவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கான வாய்ப்பும்
பிரகாசம். உடலில் கெட்டக் கொழுப்பு அதிகம் சேர்வதனால் இருதயம் தொடர்பான
பிரச்னைகளும்
ஏற்படும். பலரும் நொறுக்குத்தீனிகளுடன் தான் தொலைக்காட்சி, அலைபேசியில் நேரம்
செலவிடுகின்றனர். இது மேற்கண்ட பிரச்னைகளை இன்னும் தீவிரமாக்கும்.
நீண்ட நேரம் 'இயர் போன்' மாட்டிக்கொண்டு பாடல், வீடியோ பார்ப்பதனால் செவித்திறன்
பாதிக்கும். தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி, அலைபேசி ஒளி திரையை
பார்க்கக்கூடாது. குறிப்பாக மாலை 6:00 மணிக்கு மேல் இதை தவிர்ப்பது நலம். இரவு
துாக்கத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாக கட்டாயம் பார்க்கக்கூடாது.
ஆபத்தான அலைபேசி போதை
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே இருந்ததால் இயல்பாகவே அலைபேசி, கணினி,
'டிவி'க்கு அடிமையாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆன்லைன் வகுப்பில் நீண்ட
நேரம் செலவிடுவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படும். இதுவரை பள்ளிக்கு
அலைபேசி
அனுமதிக்கப்படாத நிலையில் இன்று கட்டாயமாக குழந்தைகளின் கைகளில் திணிக்கப்பட்டு
உள்ளது. இது அவர்களை திசை திருப்பி இணையதள விளையாட்டுகளில்மூழ்கடித்து