Breaking News

இன்று முதல் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாள் தமிழக அரசு உத்தரவு

இன்று முதல் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாள் தமிழக அரசு உத்தரவு
இன்று முதல் மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள்மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது. கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.