மண்ட பத்திரம் ஹெல்மெட் போடுங்க இளைஞர்களே 3,628 பேருக்கு தலைக்காய ஆபரேஷன்
மண்ட பத்திரம் ஹெல்மெட் போடுங்க இளைஞர்களே 3,628 பேருக்கு தலைக்காய ஆபரேஷன்
கோவை அரசு மருத்துவ மனையில், தினமும் சராசரியாக 45 முதல் 50 நோயாளிகள் வரை
விபத்துக்குள்ளாகி, மூளை மற்றும் தண்டு வட அறுவை சிகிச்சைக்கு ஆளாகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதும், ெஹல்மெட் அணியாமல் பைக்
ஓட்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம்
உச்சத்தில் இருந்தபோது, கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்கள்
வெளியில் நடமாடவே முடியாத நிலை இருந்ததால், நகரம் முழுவதும் வெறிச்சோடியது. அந்த
சமயத்தில், வாகன போக்குவரத்துகளும் பெரிதளவில் இல்லாமல் இருந்ததால், விபத்துகளில்
சிக்குவோரின் எண்ணிக்கையும், வெகுவாக குறைந்திருந்தது.இந்நிலையில், கட்டுப்
பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், விபத்தில் சிக்கி, தலை, தண்டுவடத்தில் காயம்
ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து கொண்டே போகிறது.நாள் ஒன்றுக்கு, சராசரியாக 45 முதல் 50 நோயாளிகள் வரை
விபத்துக்குள்ளாகி, மூளை மற்றும் தண்டு வட அறுவை சிகிச்சை நிபுணர்களால், சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும், சுமார் 35 அவசர உயிர் காக்கும் தலைக்காய
அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் மூளை நரம்பியல் தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவு துறை தலைவர்
வெங்கடேஷ் கூறியதாவது:இங்கு, கோவை மட்டுமல்லாது மேட்டுப்பாளையம், ஊட்டி,
பொள்ளாச்சி, தாராபுரம், ஈரோடு, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
இருந்தும் பலர் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 11 மாதங்களில் மட்டும், 3,628
பேருக்கு இங்கு தலைக்காய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி,
மூளையில் கட்டி, ரத்த குழாயில் வீக்கம், தண்டுவடத்தில் கட்டி உள்ளிட்ட, பல்வேறு
மூளை மற்றும் தண்டுவட உபாதைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, மாதந்தோறும்
சராசரியாக, 25 முதல் 30 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மூளையில்
குழாய் அடைப்பு, ரத்த குழாய் வெடித்து ரத்த கசிவு, ரத்த குழாய் வீக்கத்தால்
ஏற்படும் பக்கவாதம் உள்ளிட்ட, பல்வேறு மூளை நரம்பு சம்பந்தமான தொந்தரவுகளுக்கு,
நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் கொண்டும் சிகிச்சை
அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இளைஞர்களே அதிகம்!கோவை அரசு
மருத்துவமனையில் விபத்துகளில் சிக்கி தலைக்காய அறுவை சிகிச்சை செய்து
கொள்பவர்களில், 70 சதவீதம் இளைஞர்கள் என்பதுதான், வேதனைக்குரிய விஷயம். மீதமுள்ள,
30 சதவீதத்தினர், பெரும்பாலும் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தில்
சிக்கியவர்கள்.இதுதவிர, தலையில் காயம் ஏற்படுவதற்கு, ஹெல்மெட் அணியாமல் பைக்
ஓட்டுவதே முக்கிய காரணம் என்கின்றனர் டாக்டர்கள். இதனால், ஒவ்வொரு மாதமும்
குறைந்தது, 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சோகமும், தொடர்ந்து கொண்டே
போகிறது.தலைக்காயத்துக்கு சிகிச்சைஜனவரி - 456பிப்ரவரி - 445மார்ச் - 321ஏப்ரல் -
69மே - 306ஜூன் - 282ஜூலை - 255ஆகஸ்ட் - 285செப்டம்பர் - 403அக்டோபர் -
394நவம்பர் - 412மொத்தம் - 3,628