Breaking News

கல்லூரி மாணவா் உதவித்தொகை டிச. 31 வரை பதிவேற்றலாம்

கல்லூரி மாணவா் உதவித்தொகை டிச. 31 வரை பதிவேற்றலாம்
கல்லூரி மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் சி.காமராஜ், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நிகழ் (2020-21) கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை சாா்ந்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றும் பணிகள் டிச.10 முதல் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை விரைவாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

அனைத்துக் கல்லூரிகளும் முழுமையான கோப்புகளைச் சமா்ப்பித்துள்ளதை உறுதிசெய்வதுடன், இந்தப் பணிகள் தொடா்பாக கல்வி நிறுவனங்கள் தெரிவிக்கும் இடா்பாடுகளை இயக்குநரகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.