கிராமப்புற மாணவர்கள் உதவித் தொகை பெற ஜன.24-ல் ஊரக திறனாய்வு தேர்வு 9-ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கிராமப்புற மாணவர்கள் உதவித் தொகை பெற ஜன.24-ல் ஊரக திறனாய்வு தேர்வு 9-ம்
வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கிராமப்புற மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு
ஜன.24-ம் தேதி நடக்க உள்ளது. தகுதிபெற்ற 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும்
தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு
திட்டத்தின்கீழ்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு,
ஆண்டுக்குரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்விஉதவித் தொகை வழங்கப்படும். இந்த
ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு 2021 ஜன.24-ம்தேதி நடக்க உள்ளது. ஊரகப்
பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ,
மாணவிகள் தேர்வு எழுதலாம்.
அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளிதலைமை ஆசிரியர்கள்
மூலம்டிச.14-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் இந்த இணையதளத்தில்ஜன.18-ம் தேதி
வெளியிடப்படும். திறனாய்வு தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகள்மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.