Breaking News

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச CA பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச CA பயிற்சி 
தமிழக பள்ளிக் கல்வித் துறை, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.சி) ஆகியவை இணைந்து,அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவசமாக CA பயிற்சி அளிக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வரும் டிச.23-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் தினமும் 5 மணி நேரம் வீதம், ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களுக்கு நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். இலவச பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9677126011, 8220522669, 7358506400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். தனியார் பள்ளி மாணவர்களுக்கு Rs.9500 பயிற்சி கட்டணம் நிர்ணயம்.

இதில் சேர விரும்பும், மாணவர்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதற்கான அறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை, அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.