Breaking News

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?
      தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது ஆனால் தம்பி தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை

தேவையான ஆவணங்கள்

புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

மாற்றுச் சான்றிதழ்

மதிப்பெண் பட்டியல்

ஜாதி வருமானச் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கல்வி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற எண்ணத்தை இணையத்தில் லாகின் செய்யவேண்டும். நுழைந்த பின்னர் Revenue department ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் first graduate certificate என்பதை தேர்வு செய்ய வேண்டும் அப்போது ஒரு பக்கம் திறக்கும் அதில் ரிஜிஸ்டர் ஏன் கிளிக் செய்யவும் அந்த எண் தெரியாதவர்கள் உங்களது பெயர் மற்றும் தந்தையை பெயரை கொடுத்து தேடிக்கொள்ளலாம்.

அதாவது தொலைபேசி எண் கொடுத்து ஓடிபி ஜென்ரேட் செய்யவும். உங்களது எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை கொடுத்து ப்ரோசிட் ஆப்சன் தேர்வுசெய்யவும். பின்னர் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பம் வரும் அவற்றை சரியாக நிரப்பவும்.

ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். உங்களுக்கு selfdeclaration form ஒன்று வரும். அதனை பிரிண்ட் செய்து ஒப்பிட்டு, மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் வேண்டும். ஆன்லைன் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்த சான்றிதழுக்கு ரூபாய். 60 வசூலிக்கப்படுகிறது. அடுத்து எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பின்பு சான்றிதழை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.