Breaking News

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இதையெல்லாம் கடைபிடியுங்கள்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இதையெல்லாம் கடைபிடியுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம்.

ஆரோக்கியமான உணவு

உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் சர்க்கரை மற்றும் செயற்கை பானங்கள் உள்ளிட்டவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

தினசரி இவற்றை கடைபிடியுங்கள்

நாள் முழுவதும் வெந்நீர் அருந்தவும். காலையில் சியவன்பிரெஷ் லேகியம் ஒரு ஸ்பூன் உட்கொள்ளவும். மஞ்சள், சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்கவும். துளசி, இலவங்கப்பட்டை, கரு மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து மூலிகை நீரை அருந்தவேண்டும்.

நல்ல தூக்கம்

தூக்கத்தில் தான் உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்கின்றது. போதுமான நேரம் தூங்காதவரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6 மணி முதல் 8 மணி வரை இரவில் தூங்குவது மிகவும் அவசியம். தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உறங்கச் செல்வது, விழித்தெழுவதும் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தம் அதிகரிக்கும் போது அது நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளை பின்பற்றுங்கள். தியானம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

விட்டமின்

விட்டமின் சி மற்றும் விட்டமின் டி ஆகிய சத்துக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சளி பிடிக்கும் கோபத்தை குறைப்பது மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராட வழிவகை செய்கின்றன.

உடற்பயிற்சி

நோய்க்கு எதிராகப் போராடுவதில் உடலின் திறனை பலப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. நாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் சிறப்பாக அமைகிறது. தினசரி ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி உடர் பயிற்சிகளை செய்யவும்.

இந்தப் பழக்கத்தை தவிருங்கள்

கொரோனா பாதிப்பானது நுரையீரலை அதிகம் தாக்கும். நமது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் முழுமையாக முடக்கி விடுகிறது. இதை எதிர்கொள்ள உடலை பலவீனப்படுத்தி, நோய்களுக்கு வழிவகுக்கும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களை உடனடியாக கைவிடுங்கள்.

அடிக்கடி கை கழுவவும்

நாம் வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கம் கை கழுவுவது. கிருமிகள் பரவுவதை தடுக்க இது மிகச்சிறந்த வழியாகும். கைகளுக்கு சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடி நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.