பள்ளிகள் திறப்பு இப்போதில்லை அமைச்சர் திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பு இப்போதில்லை அமைச்சர் திட்டவட்டம்
''மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால்,
பள்ளிகள் திறப்புக்கு தற்போது சாத்தியமில்லை,'' என, பள்ளி கல்வி அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று முதன்மைக்
கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
பங்கேற்று, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது, அமைச்சர் செங்கோட்டையன்
பேசியதாவது:முதன்மைக் கல்வி அதிகாரிகள், அரசின் கொள்கைகளை அறிந்து, அதற்கேற்ப
மாணவர்களின் நலன் பேணி நடக்க வேண்டும். தமிழக அரசு, இரு மொழி கொள்கையை உயிர்
மூச்சாக கொண்டுள்ளது.எனவே, அதற்கு மாறாக, ஒருங்கிணைந்த கல்வி திட்ட துறையில்
இருந்து கடிதங்கள் வந்தால், அதை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து வர வேண்டும்.
மாறாக, தாங்களாகவே உத்தரவிட்டால், அதன் விளைவுகளுக்கும், அவர்களே பொறுப்பேற்க
நேரிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:தமிழகத்தில், பள்ளிகள் திறப்புக்கு, தற்போது சாத்தியம் இல்லை.
பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால், பள்ளிகளை திறப்பது
குறித்து, தற்போது முடிவு செய்ய இயலாது. அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள்
வழங்கப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' வழியிலும், கல்வி, 'டிவி' வழியாகவும் பாடங்கள்
நடத்தப்படுகின்றன. இந்தப் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.இவ்வாறு, செங்கோட்டையன்
கூறினார்.