தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து பள்ளி
மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அனைத்து
நிறுவனங்களும் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளும்
திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும்
கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு
நடத்துவது வழக்கம்.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பொதுத் தேர்வு நடத்துவது
எப்படி?என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வினை ஒத்தி வைப்பது,
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைப்பது ,நேரடி வகுப்பினை தொடங்குவது முதலியவை
குறித்தான ஆலோசனையை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி சென்னை அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கின்றது.காலை முதல் மாலை வரை நடக்கும் இந்த
கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், சி. இ.ஓ-க்கள்,பள்ளிக்கல்வி முதன்மை
செயலர்,பள்ளிக்கல்வி கமிஷனர், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களுடன் ஆலோசனை
நடத்துகின்றனர் .