பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் பள்ளிகளைத் திறப்பதற்கான
நேரம் இதுவல்ல அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி
தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .சென்னை
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில்
கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுகளை
தள்ளிவைப்பது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக
உள்ளதாகவும், பள்ளிகளை ஆய்வு செய்வதில் சுணக்கம் கூடாது என்றும் முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தினார். ஆன்லைன் வகுப்புகளை
கண்காணிக்குமாறும், மாணவர்கள் பார்வைத் திறன், கண் பார்வையையும் அவ்வப்போது
பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
வழங்கினார்.
ஆய்வு கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்
செங்கோட்டையன், “பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு
எடுப்பார். பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்.
பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல. 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை
உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்” என்றார்.வரும் அக்.15ம் தேதி
முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும்
கொரோனா சூழலுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
என்று விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.