Breaking News

ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை

ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை
பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்க பட்டு உள்ளது. இனி, 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது.தமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக ரீதியாகபல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

அதில், வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பு, 40 வயது என, முடிவு செய்யப்பட்டது. இந்த அரசாணையின் நகல், தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே, இனி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதுவரை, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதான, 58 வயது நிரம்பாத அனைவரும், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 

மேலும், 58 வயது வரை உள்ளவர்களுக்கு பணி வழங்குவதால், அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.சிலர் ஒரு மாதம், இரண்டு மாதம் மட்டும் அரசு பணியில் இருந்து விட்டு, பல வருடங்கள் பென்ஷன் பெறும் நிலை ஏற்பட்டது. 

அதனால், அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதை தவிர்க்கவே, 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, வருங்காலங்களில், வட்டார கல்வி அதிகாரி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு, 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளனர்.