ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை , அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்பதற்கு ஏதுவாக டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்கள் , வீடியோ பாடங்கள் , கல்வி தொலைக்காட்சி , பயிற்சிதாள் ( Worksheet ) மற்றும் online மதிப்பீடு போன்ற செயல்பாடுகளை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ‘ வீட்டு பள்ளி ' ( School at Home ) 6T60TM அணுகுமுறையின் மூலம் முதல் XII வகுப்புகளுக்குரிய பாடங்களில் கற்றல் விளைவுகளுக்கேற்ப ( Learning Outcome Based ) ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. தங்களுடைய வகுப்புக்குரிய பாடங்களை தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி கற்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும். அதற்கான உரிய வழிகாட்டுதலை வழங்கிட அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பள்ளிகளில் வகுப்பு வாரியாக அமைக்கப்பட்டுள்ள இந்த Whatsapp குழுக்களில் e-learn.tnschools.gov.in மற்றும் TNTP- ல் உள்ள பாடவாரியான வளங்களை பகிர்ந்திடவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.