Breaking News

ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
   1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தபிறகே அதுகுறித்து ஆய்வு செய்து, முதல்வரிடம் பேசி பின்னர் முதல்வர் முடிவெடுப்பார். எனவே, தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.

  ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்; எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். முன்னதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.