ஆன்லைன் மூலம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்
ஆன்லைன் மூலம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் கல்லூரி இறுதி ஆண்டுகள் செமஸ்டர் தேர்வை மட்டும் ரத்து செய்ய யுஜிசி மறுத்துவிட்டது
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் பல்கலைக்கழகங்கள் நடத்தியாக வேண்டும் என்று யூஜிசி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாகவும் திருவாரூர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் வெற்றி பெறாத பாடங்களுக்கான அரியர்ஸ் தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது
பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவுப்படி இந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் ஒருவேளை ஆன்லைனில் எழுத முடியாத மாணவர்கள் சகஜ நிலை திரும்பி பின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வு மையத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும் திருவாரூர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது