Breaking News

அரசு பள்ளிக்கு திரும்பிய தமிழக மக்கள்

அரசு பள்ளிக்கு திரும்பிய தமிழக மக்கள்
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பாக 9 ஆம் வகுப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது. நகரத்தின் பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதகமான குறிப்பில் தொடங்கியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை முதல் நாளில் சரியாக இல்லை என்றும், இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.