ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா
ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் 'சி' 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி
சாத்துக்குடியில் வைட்டமின் 'சி' 45 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் 'சி' குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.